கோவை அரசு மருத்துவமனையில் தொடரும் பைக் திருட்டு: தனியார் காவலர்கள் தொடர் சோதனை

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடரும் பைக் திருட்டை கட்டுப்படுத்த மருத்துவமனையின் தனியார் காவலர்கள் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடரும் பைக் திருட்டை கட்டுப்படுத்த மருத்துவமனையின் தனியார் காவலர்கள் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 7,000 வெளி நோயாளிகளும், 1,600-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.



இப்படி சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பார்ப்பதற்காகவும் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைகள் பெறுவதற்காகவும் பலர் இரு சக்கர வாகனங்களில் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். இப்படி தினமும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தங்களில் நிறுத்தப்படுகிறது. அதேபோல், இங்கு வரும் வாகனங்களை நிறுத்த மொத்தம் 7 இருசக்கர வாகன நிறுத்தங்கள் இந்த மருத்துவமனையின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுத்தங்களில் இருந்து சில நாட்களாகவே தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்படுகிறது.

இப்படி தொடரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த மனவேதனை அடைந்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்தும் பொருட்டு டோக்கன் சிஸ்டம் முறையில் பார்க்கிங் வசதிகளும் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மொத்தம் மூன்று வழிகள் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது திருட்டை கட்டுப்படுத்த இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஆர்ட்ஸ் காலேஜ் பின்புற கேட் வழியாக செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. அப்படி வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை கண்காணித்து வாகனத்தின் எண்கள் பதிவு செய்யப்பட்டு சந்தேகப்படும் நபர்களின் வாகன பதிவுகளை சரி பார்த்த பின்பு தான் வாகனம் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...