சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின் அமர்ந்து செல்பவர்கள் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், அவர்கள் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணியவேண்டும் என போக்குவரத்துக் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் இந்தாண்டு ஜூலை வரை 38,491 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதில் 15,601 விபத்துக்கள் இருசக்கர வாகனங்களால் நிகழ்ந்துள்ளன. அதில் 7,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 2,476 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், அவர்கள் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
இந்த உத்தரவை மீறி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும், இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.