திருச்சூர்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கிய கோவையைச் சேர்ந்த மருத்துவக் குழு, அவர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டது அனைவரிடத்தில் சற்று நிம்மதி அளித்துள்ளது.
திருச்சூர்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கிய கோவையைச் சேர்ந்த மருத்துவக் குழு, அவர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டது அனைவரிடத்தில் சற்று நிம்மதி அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கேரள மாநிலமே மழை மற்றும் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியதால், பொதுமக்கள் முகாம்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கேரள அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று கோவையைச் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் சங்கத்தினர் சார்பில் 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர். அதோடு, சிகிச்சைக்கு வந்தவர்களுடன் மருத்துவக் குழுவினர் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். ஒவ்வொருவருக்கும் கையில் கயிறு கட்டி தங்களது அன்பினை வெளிப்படுத்தினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேதனைக்குள்ளாகியுள்ள நிலையில், கேரள மக்களுக்கு இந்தக் கொண்டாட்டம் சற்று நிம்மதியளித்துள்ளது.