வட்டமலைகரை ஓடை அணைப் பகுதியில் தீ விபத்து : 100 ஏக்கர் பரப்பிலான மரங்கள் சேதம்

திருப்பூர் : வெள்ளகோவில் அருகேயுள்ள வட்டமலைகரை ஓடை அணைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 100 ஏக்கர் பரப்பிலான தாவரங்கள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் : வெள்ளகோவில் அருகேயுள்ள வட்டமலைகரை ஓடை அணைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 100 ஏக்கர் பரப்பிலான தாவரங்கள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமடைந்தன. 

 

வெள்ளக்கோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை அணை அமைந்துள்ளது. பி.ஏ.பி., பாசன உபரி நீர் மூலம் நிரம்பும் வகையில், கடந்த 1980-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் மூலம் 6,060 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் வாய்க்கால்கள் உள்ளன. 

கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் வர வழிவகை செய்யாமல் வறண்டு கிடப்பதால் அணை முழுவதும் சீமை கருவேல மரங்கள், வேம்பு, வேலான் மரங்கள், பனைமரங்கள் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அதிகமான புதர்கள் உள்ள இந்தப் பகுதிகளில் முயல், மான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும், அருகில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் கால்நடை மேய்ச்சல் பகுதியாகவும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இன்று மதியம் அணைப் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதைக் கண்ட பொது மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீவிபத்தினால், சுமார் 100 ஏக்கர் பரப்பிலான தாவரங்கள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வட்டமலைகரை ஓடை அணைப் பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்கள் மறைவான காட்டுப் பகுதிக்கு வந்து மது அருந்துவது வழக்கமாக நடந்து வருகிறது. அப்படி வந்தவர்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...