திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கருமேகங்கள் சூழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கொட்டிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கருமேகங்கள் சூழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கொட்டிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பூரில் இன்று காலை முதலே கடுமையான வெயில் கொளுத்தி எடுத்து வந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெளியில் நடமாட மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மதியத்திற்கு பிறகு திடீரென கருமேகங்கள் சூழ குளிர்காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து தூரலாக ஆரம்பித்த மழை, பின்னர் வெளுத்து வாங்கியது.

தாராபுரம், காங்கயம், பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே சாலையில் சென்றன. திடீரென பெய்த இந்த மழையின் காரணமாக குளிர் சீதோஷ்ணநிலை நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.