கோவை: கேரள பேரிடர் மற்றும் அதிலிருந்து மக்கள் மீண்டு வந்த முறை குறித்து கோவை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறியுள்ளார்.

ஓசை அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நீர்வளங்களை முறையான மேலாண்மை செய்ய வேண்டிய நேரம் இது. இது மிகவும் எளிது. இயற்கை பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்பட்டி ஜாமீன்தாரின் நிலம் களக்காடு, முண்டந்துறை காப்புக் காட்டுப்பகுதியில் இருந்தது. இதனை அரசு காப்புக்காடாக அறிவித்தது. அதே நேரத்தில், ஜாமீன்தார் வேறு இருவருக்கு லீசுக்கு கொடுத்துவிட்டார்.
இது தொடர்பாக, நீதிமன்றத்தில் 40 ஆண்டுகளாக நடந்தது. கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி, தீர்ப்பு வெளியானது. அப்போது அது வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது மக்கள் விழிப்புணர்வு அதிகரித்தது. அப்போது நான் அங்கு களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குனராக பணியாற்றினேன். விழிப்புணர்வு இருந்தால் இயற்கை பாதுகாப்பில் திறம்பட செயலாற்ற முடியும்." என்றார்.

சையது கூறுகையில், "எங்கள் அமைப்பு மூலம் 50-வண்டிகளுக்கு மேல் அடங்கிய நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. இங்கு கால் சென்டர் அமைத்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4000 மக்களுக்கு உதவியுள்ளோம்." என்றார்.