கோவை: பொற்கொல்லர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கூறி பொற்கொல்லர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இயந்திரங்கள் கொண்டு வெளிமாநிலத்தவர்கள் தங்க நகை செய்வதால் பாரம்பரிய கைவினை தங்க தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கார்பரேட் நிறுவனங்களுடன் போட்டியிட நலிவடைந்த பொற்கொல்லர்களை 'கோல்டு ஸ்மித் கிளஸ்டர்' திட்டத்தினை சிட்கோ மற்றும் எம்.எஸ்.எம்.இ மூலம் நடைமுறைப் படுத்த வேண்டும்,
மேற்கு வங்கத்தில் நடைமுறை படுத்துள்ள 'கூட்டுத் தொழில் திட்டம்' போல கோவையில் தங்க நகை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒருங்கிணைந்த தங்க நகை தொழில் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினர்.
மேலும், தங்க நகை தொழிலாளர்கள் கூட்டுறவு அங்காடி அமைக்க வேண்டும், தங்க நகையின் பி.எஸ்.ஐ தரத்தை அறிய இந்திய அரசு 15 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், இதில் பல நிறுவனங்கள் தரம் குறைந்த நகைகளுக்கு சான்றிதழ் வழங்குவதால் கூட்டுறவு சங்கம் அமைத்து அரசே தராசன்று வழங்கும் நிறுவனம் நடத்தும் பட்சத்தில் மகளிர் பொற்கொல்லர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பொதுமக்களுக்கு தரமான தங்க நகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதால் பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் கூறினர்.