நிதி திரட்ட ஓணம் கொண்டாடிய ஸ்பார்க் (SPARK) ரவுண்ட் டேபிள் 323
கோவை: கோயம்புத்தூர் ஸ்பார்க் (SPARK) ரவுண்ட் டேபிள் 323, சார்பில் கோவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கேரள வெள்ள நிவாரணத்திற்கான நிதியைத் திரட்டும் பொருட்டு இந்த நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பைக் கொடுத்தனர்.
இதில், ஸ்பார்க் (SPARK) ரவுண்ட் டேபிள் 323 சார்பாக ரூ.50,000 வழங்கப்பட்டது. மேலும், மினால் என்ற உறுப்பினர் ரூ.3.5 லட்சத்தை நிவாரணத்திற்காக கொடுத்தார்.

அத்துடன், 150 ஜோடி காலணி மற்றும் உடைகளும் நிவாரணம் வழங்குவதற்காக திரட்டப்பட்டது. இது தவிர புத்தகங்கள், சீருடை மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்க இந்த ரவுண்ட் டேபிள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.