வ.உ.சி. மைதானத்தில் வைஃபை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ட்ரீ திறப்பு

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வ.உ.சி. மைதானத்தில் வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் வ.உ.சி. மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தினை திறந்து வைத்து, எல்.இ.டி. விளம்பரப் பலகையின் செயல்பாட்டினையும் துவக்கி வைத்தார். 

இந்த மரத்தின் மதிப்பு, ரூ.30 லட்சம் என்றும், இதுபோல் மொத்தம் 25 இடங்களில் இந்த தங்கமரம் அமைக்கப்படவுள்ளது என்றும் இதன் மூலம் மாநகராட்சிக்கு வருட வருமானம் ரூ.4,75,000 என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர் லட்சுமணன் நன்றி தெரிவித்தார். மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், செயற்பொறியாளர் (திட்டம்) திரு.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...