கோவை: கணுவாய் அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தலை நசுங்கி பலியானார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கினர்.
கோவை: கணுவாய் அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தலை நசுங்கி பலியானார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கினர்.

கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி கோமதி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது கோவையில் இருந்து தடாகம் நோக்கி ஒரு தனியார் பேருந்து வந்துள்ளது. அதனை அருண்குமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அதிவேகமாக வந்த அப்பேருந்து கணுவாய் அருகே வந்தபோது முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோமதி மீது அதிவேகமாக மோதியது. இதில் நிலை நடுமாறி சாலையில் விழுந்த கோமதி மீது அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அருண்குமார் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, பேருந்தை கற்களை கொண்டு அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் பேருந்தை காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.