திருப்பூர் வீட்டு வசதி சங்கத் தேர்தலில் மீண்டும் மோசடி : மார்க்சிஸ்ட் கட்சி முற்றுகைப் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்திற்கு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தலைவர், துணைத் தலைவர் மற்றும் 9 இயக்குநர்களுக்கான தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்திற்கு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தலைவர், துணைத் தலைவர் மற்றும் 9 இயக்குநர்களுக்கான தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

அதில் அதிகாலை முதலே அ.தி.மு.க.,வினர் போலி உறுப்பினர்களை நூற்றுக்கும் மேற்பட்டவர்களை நிறுத்தி வைத்து சங்கத்தின் உண்மையான உறுப்பினர்களை உள்ளே வந்து தேர்தலுக்கு விண்ணப்பிக்க விடாமல் தடுத்தனர். அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் அ.தி.மு.க.,வினர் இந்த ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., உள்பட கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.



ஆனால், காவல்துறையினர் எதிர்க்கட்சியினர் மீது குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தடியடி தாக்குதல் நடத்தினர். காவல் துறையின் அராஜகமான தாக்குதலைக் கண்டித்தும், கூட்டுறவுத் தேர்தல் மோசடியைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்போது தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நேற்று (சனிக்கிழமை) காலை மீண்டும் வீட்டு வசதி சங்கத்துக்கான தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியது. அ.தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக காவல்துறை உதவியுடன் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சங்க நுழைவு வாயிலில் வரிசையில் நிறுத்தினர்.



கூட்டுறவுச் சங்க அலுவலகம் திறக்கப்படாமல் கதவு சாத்தப்பட்டு இருந்து. அதற்கு முன்பாக வடக்கு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் அமர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வளாகத்தின் முகப்புப் பகுதியிலும் நுழைவாயில் கதவை பூட்டி வைத்து இரும்புத் தொப்பி அணிந்த காவலர்களை ஏராளமாக குவித்து வைத்திருந்தனர். அ.தி.மு.க.,வினரின் தேர்தல் நாடகத்துக்கு ஒத்துழைப்புக் கொடுத்து, பிறரை உள்ளே விடாமல் காவல் துறையினர் தடுத்தனர்.

காலை முதல் வேட்புமனுத் தாக்கல் முடியும் நேரமான மாலை 5 மணி வரை யாரையும் உள்ளே செல்ல முடியாத படி அ.தி.மு.க.,வினர் தடுத்து, தாமதப்படுத்தினர். இந்நிலையில், இந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்களான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த த.ஜெயபால், வை.ஆனந்தன், ச.நந்தகோபால் உள்பட உறுப்பினர்கள் நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்தும் அவர்களை உள்ளே விடவில்லை. மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அதிகாரி முறையாக எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் அங்கிருந்து நழுவிச் சென்றார். கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வெளியேறி வந்த அவரிடம் வரிசையில் நின்ற உறுப்பினர்கள் கேட்டபோது, "நான் தேர்தல் நடத்தும் அதிகாரி இல்லை" என்று கூறிவிட்டு ஓடிச்சென்று காரில் ஏறி புறப்பட்டார்.

உண்மையான உறுப்பினர்களிடம் வேட்பு மனுவைப் பெறாததுடன், நான் தேர்தல் அதிகாரி இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரி அங்கிருந்து நழுவிச் சென்றது அங்கிருந்தவர்களுக்கு அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

எனவே அவர் போலி அதிகாரியா? என்றும் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தால் அவர் தேர்தல் அதிகாரிதானா? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் உண்மையான தேர்தல் அதிகாரி இல்லை என்றால், யார் தேர்தல் அதிகாரி? என்றும் கேள்வி எழுப்பினர். 

இந்த கூட்டுறவு சங்க தேர்தலில் நடைபெறும் மோசடி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரினர். மோசடியைக் கண்டித்தும், தேர்தல் அதிகாரியின் நடவடிக்கையை எதிர்த்தும் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இக்கோரிக்கை குறித்து திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினரிடமும் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...