கோவையில் வரும் செப்., 2 மற்றும் 3-ம் தேதிகளில் 'அடவு' தெருக்கூத்து
கோவை: வரும் செப்., 2 மற்றும் 3-ம் தேதிகளில் உடல்வெளி ஆர்ட் பவுண்டேசன் சார்பில் அடவு என்னும் தெருக்கூத்து நடைபெற இருக்கிறது.
இலாப நோக்கமற்ற அமைப்பான உடல்வெளி ஆர்ட் பவுண்டேசன், அழிந்து வரும் தமிழகத்தின் பாரம்பரிய கலையான தெருக்கூத்தை பிரபலப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உடல்வெளி ஆர்ட் பவுண்டேசன், சித்தார்த் பவுண்டேசன் மற்றும் வித்யா வானம் என்ற அமைப்பும் இணைந்து கோவையில் தெருக்கூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, செப்., 2-ம் தேதி திருச்சி சாலையில் உள்ள பெர்க்ஸ் பள்ளியில் நடக்கிறது. தொடர்ந்து, செப்.,3-ம் தேதி ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி வசனங்களை உள்ளடக்கிய இந்த தெருக்கூத்தை காண திரளானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.