கோவை : சொத்து அடமான பதிவுக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்
கோவை: சொத்து அடமான பதிவுக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கொசிமா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசு திடீரென சொத்து அடமான பதிவுக் கட்டணத்தை (MOTD) ரூ. 25,000-ல் இருந்து ரூ. 30,000 ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே, அதனை ரூ. 10,000 ஆக மாற்றக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இப்போது எந்தவித காரணமும் இல்லாமல், ரூ. 30,000 ஆக உயர்த்தி இருப்பது சிறு, குறுந் தொழில்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கொசிமா இந்தக் கட்டணத்தை ரூ. 10,000 என மாற்றி அமைக்கக் கோரிக்கை வைக்கிறது. இல்லையெனில், சிறு, குறுந் தொழில்களுக்கு உத்யோக் ஆதாரின் ஆதாரத்தைக் கொண்டு சலுகை அளிக்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.