தேச துரோக வழக்குகளை ரத்து செய்து திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் : கோவையில் மே 17 இயக்கத்தினர் பேட்டி

கோவை: திருமுருகன் காந்தி மீதான ஊபா, தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகளை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் வலியுறுத்தினார்.


கோவை: திருமுருகன் காந்தி மீதான ஊபா, தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகளை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் வலியுறுத்தினார். 

இது தொடர்பாக கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- குடிமகனின் அடிப்படை உரிமைகளைப் பறித்து நீண்ட நாட்கள் தடுப்பு காவலில் வைக்க, அரசின் தவறான கொள்கைகளை எதிர்க்கும் நபரை ஒடுக்குவதற்கு ஊபா சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்து ஐ.நா.,வில் பேசியதற்காக ஊபா சட்டமும், பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தது, பொதுக்கூட்டங்களில் உரிய அனுமதி பெற்று பேசியதற்கும் 4 தேச துரோக வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் திருமுருகன் காந்தி மீது காவல்துறை பதிவு செய்துள்ளது. 

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தவறாக நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு ஏன் அரசு நஷ்ட ஈடு வழங்கவில்லை என ஐ.நா., நிபுணர் குழுவான வேலை குழு மத்திய, மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு அரசுகள் பதிலளிக்காமல் சர்வாதிகாரப் போக்கோடு செயல்படுகிறது. மேலும், திருமுருகன் காந்திக்கு எதிராகப் பாசிச அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் கைகோர்க்க வேண்டும். தமிழக மக்களை காக்கும் பணியில் மே 17 இயக்கம் தொடர்ந்து போராடும். அரசின் அடக்குமுறைகளுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை, இவ்வாறு அவர் கூறினார். 

இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் பேசுகையில்," திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்குகள் கண்டிக்கத்தக்கது. அதற்கு அனைத்து கட்சிகள் சேர்ந்து முடிவெடுத்து அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த இருக்கிறோம், என்றார். இந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ., தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல கட்சியினர் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...