திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் பின்அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியுமாறு போலீசார் அறிவுரை

திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகன ஒட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர்.

திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகன ஒட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர். 

தமிழகத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த உயிர் இழப்புகளை தடுக்கும் விதமாக, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் அதன் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.



இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இன்று (ஆக.,25) முதல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும், தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைக் கொடுத்து போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர். 



இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறையின் உதவி ஆணையர் கஜேந்திரன், தெற்கு காவல் உதவி ஆணையர் தங்கவேல், போக்குவரத்து ஆய்வாளர் ஜானகிராமன், உதவி ஆய்வாளர்கள் பாண்டியராஜன், கதிரேசன் உள்பட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...