கோவையில் இருந்து கேரளாவிற்கு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பி வைப்பு

கோவை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்களை கோவையில் இருந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி., வேலுமணி ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

கோவை:  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்களை கோவையில் இருந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி., வேலுமணி ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு கரங்கள் நீட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. 



இதன் ஒரு பகுதியாக, கேரள மக்களுக்கு தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்களை தமிழக ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அனுப்பி வைத்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 11 லாரிகள் மூலம் குடிநீர் பாட்டிகளை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

முன்னதாக, மாவட்ட கூட்ட அரங்கில் 'மாசில்லா தமிழகம்' திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக, மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், "கேரள மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டவுடன் முதன்முதலில் அம்மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கினார். கோவை மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே 55 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அங்கு குடிதண்ணீர் அதிகம் தேவைப்படுவதால் போக்குவரத்துத் துறை சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஒரு லட்சம் அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ள நீரில் இருந்து சுத்தமான குடிநீர் சுத்திகரிக்கும் 4 லட்சம் மதிப்பிலான இயந்திரமும் அனுப்பப்பட இருக்கிறது. 

பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்," என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...