சிம்ப்ளிசிட்டி செய்தி எதிரொலியால் 30 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு : வீரசாமி முதலியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நிம்மதி

கோவை: வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையாக பயன்படுத்தப்பட்டு வந்த சம்பவம் தொடர்பான செய்தியை சிம்ப்ளிசிட்டி வெளியிட்ட நிலையில், தற்போது அங்கு கோவை மாநகராட்சியால் திறந்தகழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை: வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையாக பயன்படுத்தப்பட்டு வந்த சம்பவம் தொடர்பான செய்தியை சிம்ப்ளிசிட்டி வெளியிட்ட நிலையில், தற்போது அங்கு கோவை மாநகராட்சியால் திறந்தகழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. 

வீரசாமி முதலியார் தெருவில் 1854-ம் ஆண்டு முதல் வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்த வண்ணமே இருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், பள்ளியின் சுற்றுப்புறச் சுவரை பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுநீர் கழிக்கும் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றத்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதோடு, நோய்கள் தொற்றும் அபாயமும் ஏற்பட்டது.



இதுபோன்ற ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டினாலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பழமை வாய்ந்த வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டுவது, அதையும் மீறி இந்தப் பள்ளியில் சேர்த்திருந்தால் வேறு பள்ளிக்கு மாற்றுவது போன்ற சூழல்கள் உருவாகி வருகின்றன. 

இந்த சுகாதார சீர்கேடு குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், "பள்ளியின் சுற்றுப்புறச் சுவரை நாள்தோறும் மாநகராட்சி ஊழியர்களின் மூலம் நாள்தோறும் தூய்மை செய்து வருகிறோம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்சனை இருந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை தொடரும் பட்சத்தில், சுவர்களில் சுவர்களில் எழுதியோ அல்லது கடவுள் உள்ளிட்ட படங்களை ஒட்டி வைக்கவோ முடிவு செய்துள்ளோம்," என்றார். 

பள்ளி வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் மறைவைப் பயன்படுத்தி, பொதுமக்கள் சிறுநீர் கழித்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான செய்தியை கடந்த 23-ம் தேதி சிம்ப்ளிசிட்டி வெளியிட்டது. இந்த செய்தியின் தாக்கத்தால், கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த கழிப்பறை பிரச்சனைக்கு கோவை மாநகராட்சி முடிவு கட்டியுள்ளது. பொதுமக்கள் சிறுநீர் கழிக்க வசதியாக, திறந்த வெளிக் கழிப்பறையை அங்கு தற்போது தற்காலிகமாக அமைத்துள்ளது. இதனை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். 

சிம்ப்ளிசிட்டியின் இந்த செய்தியின் மூலம் 30 ஆண்டுகள் வேதனை நீங்கி, வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...