கருணாநிதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சி : ஸ்டாலின் மற்றும் கலைத்துறையினர் கோவை வந்தடைந்தனர்.

கோவை: கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள 'மறக்க முடியுமா கலைஞரை' நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சினிமா துறையினர் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர்.


கோவை: கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள 'மறக்க முடியுமா கலைஞரை' நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சினிமா துறையினர் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர்.

நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இந்து விமானம் மூலம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று காலை கோவை வந்தடைந்தார்.

அவரைத் தொடர்ந்து, நடிகர்கள் சத்யராஜ், நாசர், பார்த்திபன், ராஜேஷ் மற்றும் மயில்சாமி ஆகியோர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் நடிகர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

நடிகர் நாசர் 

கலைஞரின் புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளேன். அவரை பற்றி பேச பெருமை கொள்கிறேன். கருணாநிதி ஒரு வரலாற்றை விட்டுச் சென்றவர்.

நடிகர் பார்த்திபன்

கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர் கலைஞர். எனக்கு தமிழ் மேல் உயிர். அதற்குக் காரணம் கலைஞர். அவரது அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.



நடிகர் ராஜேஷ்

வரலாறு படைக்கும் கலைஞரின் புகழ் அஞ்சலியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.



நடிகர் சத்யராஜ்

கலைஞர் வசனங்கள் எழுதிய பல படங்களில் நான் நடித்து உள்ளேன். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை வந்துள்ளேன்.



என்று நடிகர்கள் கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...