கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பெரும்பாலான மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள் உயர படரும் செடி, கொடிகளால் மூடப்பட்டு மின் கசிவு ஏற்படும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கின்றன.

நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது. பல மணி நேரம் நீடிக்கும் சாரல் மழை காரணமாக இப்பகுதியே பசுமையாக காட்சியளிக்கிறது.
அதே வேளையில், கிராமப்புறங்களில் வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் கொண்டு செல்லப்படும் மேய்ச்சல் நிலங்களில் உள்ள மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள் பலவற்றில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன. மின் கம்பங்களின் அடிப்பகுதி பூமியில் வளரத்துவங்கும். இவை மெல்ல மெல்ல மின் கம்பங்களை சுற்றிவளைத்து உயர படர்ந்து வளர்ந்து இவற்றை முற்றிலுமாக மூடியே விடுகின்றன.

மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளின் உச்சிக்குச் செல்லும் இவை பின்னர் மின் கம்பிகள் வழியே தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. மழைக்காலங்களில் தண்ணீர் மூலம் மேலிருந்து மின்சாரம் பூமிக்கு வரும் என எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள், ஈரமாக உள்ள நேரங்கள் இந்த செடிகளை தொட்டாலே மின்சாரம் பாயும். இதனால், இவற்றை உண்ண முயலும் ஆடு மாடுகள் மட்டுமின்றி இவற்றை மேய்க்கச் செல்லும் மனிதர்களின் உயிருக்கும் ஆபத்து.
மேலும், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் யானை, மான், காட்டெருமைகள் போன்ற விலங்கினங்களும் அடிக்கடி நடமாடுவதால் வன உயிரினங்களும் உயிரிழக்க நேரிடும் என தெரிவிக்கின்றனர். இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியில் மாதத்திற்கு ஒரு நாள் இ.பி ஷட் டவுன் என்ற பெயரில் மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் சீரமைப்பு பணிக்காக என காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில் இதுபோன்ற ஆபத்தான அவலங்கள் தொடர்கின்றன.

இது குறித்து மேட்டுப்பாளையம் மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. மின் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவே இவற்றை சீர் செய்யும் பணி தாமதமாகிறது. புகார் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள் விரைவில் சரி செய்யப்படும்." என்றனர்.