சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட குடிநீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட குடிநீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை 26 வருடங்களுக்கு செயல்படுத்த

ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்தோடு மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திட்டத்தை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

அப்போது அச்சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி கூறுகையில், "24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ளோம். பொது குழாய்கள் அகற்றப்படமாட்டாது, குடிநீர் கட்டணத்தை அரசு மட்டுமே முடிவு செய்யும் என ஆணையர் உறுதியளித்துள்ளார்.

 

ஆனால், உலக அளவில் குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்த அனைத்து நாடுகளிலும் பிரச்சனைகள் வெடித்துள்ளது. லாப நோக்கில் மட்டுமே செயல்படும் தனியார் வசம் குடிநீர் வினியோகம் ஒப்படைக்கப்படுவதால், சேவையாக இல்லாமல், தண்ணீர் ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது இத்திட்டத்தை மாநகராட்சி நிர்வாகமே செயல்படுத்த வேண்டும் என அனைவரும் கூறினர். எனவே, மக்களிடம் கருத்துகளை பெற்று, சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அக்டோபர் முதல் வாரத்தில் மக்களைத் திரட்டி நடைப்பயணம் நடத்தப்படும்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...