உதகை உணவக உரிமையாளர்கள் சார்பில் கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

நீலகிரி : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதகையிலிருந்து உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

நீலகிரி : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதகையிலிருந்து உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதிதீவிர தென்மேற்கு பருவமழையால் சுமார் 13 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. வீடுகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகள் என அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்கள் அனைவரும் அடிப்படை மற்றும் அத்தியாவசிய பொருட்களின்றி தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலிருந்து பல்வேறு நிவாரணப் பொருட்களும், நிவாரண நிதியும் பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு நிறுவனங்கள் சார்பிலும் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி முதல் இன்று வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பொருட்களையும், நிதியையும் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உதகையில் இன்று உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வர்க்கி, பிஸ்கட், தண்ணீர், முறுக்கு, ரஸ்க் என ஒரு நபருக்கு 150 வீதம் சுமார் 2,500 பேருக்கு மொத்தம் ரூ. 4 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்களை கேரள மாநிலம் மலப்புரம் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த உணவுப் பொருட்களை அந்த மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதாக உதகை உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...