கோவை : வேளாண்மையில் புதுமைகளை புகுத்திய 20 பேருக்கு, 'உழவர் மேம்பாட்டு விழா 2018' நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கோவை: வேளாண்மையில் புதுமைகளை அறிமுகப்படுத்திய 20 பேருக்கு, 'உழவர் மேம்பாட்டு விழா 2018' நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மத்திய அரசின் கரும்பு இனப்பெருக்கு நிலையம் சார்பில் கோவை கொடிசியா அரங்கில் 3 நாட்கள் நடக்கும் 'உழவர் மேம்பாட்டு விழா 2018' என்ற கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், விவசாயம் சார்ந்த பல்வேறு உபயோக உற்பத்தி பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, வேளாண்மையில் புதுமைகளை அறிமுகப்படுத்தியதற்காக 20 பேருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். இந்த 3 நாள் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 60 பேர் கவுரவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர், கொடிசியா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.,நாகராஜன், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயக்குனர் பக்ஷி ராம், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி., அருண்குமார், கனகராஜ், வேளாண் பல்கலை., துணைவேந்தர் ராமசாமி மற்றும் முனைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.