கேரளாவுக்கு ரூ. 13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பியது கோவை மாநகராட்சி

கோவை: கோவை மக்களின் உதவியோடு கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் இதுவரை ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மக்களின் உதவியோடு கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் இதுவரை ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



கடந்த வாரம் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக அணைகள் நிறைந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி 350-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு உதவுவதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்களும், நிதி உதவியும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மாநகராட்சி

கோவை மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரளாவிற்கு நிவாரணப் பொருட்களை பெற்று வழங்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேகரித்து வழங்கிய நிவாரணப் பொருட்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாநகராட்சி சார்பில் கேரளாவின் பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றது.



கடந்த 15-ம் தேதி முதல், நேற்று வரை சுமார் ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் கூறுகையில், "கோவையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் பெறப்பட்ட நிவாரணப் பொருட்கள் கேரளாவில் உள்ள நிவாரண முகாம்களுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

மாநகராட்சி அலுவலகத்திற்கு பொருட்களை எடுத்து வர இயலாதவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதவி செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் பொருட்களை வழங்கியதற்கான ரசீதுகள் பெறப்படுகின்றன. 



டூத் ப்ரஷ், சோப்பு, ஆடை வகைகள் மற்றும் காலனிகள் போன்ற நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அடுத்தடுத்த நாட்களில் அவை அனைத்தும் கேரளாவில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளது." என்றார்.

கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதால் படிப்படியாக மக்கள் தங்களின் இடத்தில் குடியமர்ந்து வருகின்றனர். வெள்ள நீரில் வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டதால், சமையல் பாத்திரம், அடுப்பு, போர்வை, காலனி போன்ற பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.

உதவி செய்ய விரும்புவோர் நிவாரணப் பொருட்களை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வழங்கலாம் அல்லது 0422- 2395156, 2302323, 2390261 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...