கேரளாவிற்கு ரூ. 700 கோடி வழங்குவதாகக் கூறவேயில்லை: கேரளாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய யு.ஏ.இ.,

கேரளாவிற்கு ரூ. 700 கோடி வழங்குவதாகக் கூறவேயில்லை: கேரளாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய யு.ஏ.இ.,

கேரளாவிற்கு ரூ. 700 கோடி வழங்குவதாகக் கூறவேயில்லை: கேரளாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய யு.ஏ.இ.,

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ. 700 கோடி வழங்குவதாக வெளியான தகவலுக்கு யு.ஏ.இ., மறுப்பு தெரிவித்திருப்பது கேரள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களாகப் பெய்த தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தையே புரட்டிப் போட்டது. இதனால், 350-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவும், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் கத்தார், மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளன. 

இதன் ஒரு பகுதியாக, கேரள மக்கள் அதிகம் பணியாற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் சார்பில் ரூ. 700 கோடி வழங்க முடிவு செய்திருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு வெறும் ரூ. 600 கோடி மட்டுமே ஒதுக்கிய இருந்த நிலையில், ஐக்கிய அரபு நாடுகளின் இந்தத் தொகை மாநிலத்தை சீரமைக்க பெரும் உதவிக்கரமாக இருக்கும் என கேரள அதிகாரிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இந்தத் தொகையைப் பெற மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இந்தத் தொகையை மத்திய அரசுப் பெற அனுமதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாகவும் சாடினர்.

இதனிடையே, வெளி நன்கொடையைப் பெறாததற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டது. அதாவது, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என 2005-ம் ஆண்டு வகுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கை முடிவே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட போது, அமெரிக்காவின் நிதியுதவியை, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்ததையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியது. மழை, வெள்ளத்தால் ஒரு மாநிலமே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது விதிமுறைகளை தளர்த்தி, ஐக்கிய அரபு நாடுகளின் நிதியுதவியைப் பெறுமாறும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு செவி சாய்த்தாற்போல் இல்லை. 

இந்த நிலையில், கேரளாவிற்கு ரூ.700 கோடி வழங்குவதாக வெளியான தகவலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்திய தூதர் அகமது அல்பானா கூறியதாவது :- மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவ வேண்டும் என்பதை தீர்மானித்துள்ளோம். ஆனால், 700 கோடி வழங்குவதாக தொடர்பாக எங்களது அரசுகளின் சார்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதுவரை எவ்வளவுத் தொகை வழங்குவது தொடர்பாகவும் திட்டமிடப்படவில்லை, இவ்வாறு கூறினார். 

வெள்ள நிவாரண நிதிகளில் ஐக்கிய அரபு நாடுகளின் தொகை அதிகமானது என்பதால், பல்வேறு திட்டங்களை கேரள அரசு தீட்டியிருந்த நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே,. அதிதீவிர தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து ரூ. 600 கோடி வழங்கிய நிலையில், இது முதற்கட்டமானது தான், குழுக்களின் ஆய்வுகளுக்குப் பிறகு மேலும் உதவிகள் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...