நீலகிரி: உதகையில் மூடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் உலா வந்த கரடியைக் கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரி சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
எனவே, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து குடியிருப்புகளுக்குள் யானை, காட்டு மாடு, கரடி போன்ற வன விலங்குகள் வருவது வாடிக்கையாகியுள்ளது. இது போன்று வரும் விலங்குகள் மனிதர்களை தாக்கி வருகின்றன. இதனால் மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை உதகையில் தற்போது மூடப்பட்டுள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை அருகே கரடி ஒன்று உலா வந்தது. இதனால், கற்பூர இலை மற்றும் விறகு சேகரிக்க சென்றவர்களும் அச்சமடைந்தனர்.

எனவே, உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கரடியை, அடர்ந்த வனபபகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.