திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளான திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலையில் சாரலாக மழை பெய்யத் தொடங்கியது. பின்னர், கனமழையாக வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர், நீச்சல் குளம் போலத் தேங்கியது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்பொழுது :- மழை பெய்ய ஆரம்பித்தாலே திருப்பூரிலுள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்க ஆரம்பித்து விடுகிறது. மழைநீருடன் கலந்து சாக்கடை நீரும் செல்வதால், மழைக்காலங்களில் சாலையில் செல்வதே மிகுந்த சிரமத்திற்குள்ளானதாக அமைந்து விடுகிறது. எனவே. சாலைகளில் தேங்கும் மழைநீரை முறையாக சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினர்.