அ.தி.மு.க., செயற்குழுவில் வாஜ்பாய், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, வாஜ்பாய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, வாஜ்பாய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சரமான எடப்பாடி  பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தி.மு.க., தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் மறைவுக்கும், கேரள, கர்நாடக வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதற்கு தமிழக அரசிற்கும், உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்திய நிர்வாகிகளுக்குப் பாராட்டு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஈ.வே.ரா., அண்ணாதுரை, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...