அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி : தொடரும் தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

கோவை: கோவையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என தேசிய பஞ்சாலை கழக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என தேசிய பஞ்சாலை கழக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ் தேசிய பஞ்சாலை கழகமானது செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் கோவை, கமுதகுடி, காளையார் கோவில் ஆகிய இடங்களில் 7 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பஞ்சாலைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மே மாதத்துடன் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.



ஆனால், தேசிய பஞ்சாலை கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தால், அனைத்து தொழிற்சங்கத்தினரும் இணைந்து கடந்த 20-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை தொடங்கினர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர, கோவையில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

தேசிய பஞ்சாலை கழகத்தின் மனிதவளத் துறையின் உதவி இயக்குநர் பங்கஜ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவை ஆகிய 4 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 30-ம் தேதிக்குள் நடத்துவது என இருதரப்பினரும் முடிவு செய்தனர். மேலும், தேசிய பஞ்சாலை கழகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 27-ம் தேதி கோவையிலும், 28-ம் தேதி காளையார் கோவிலிலும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...