தமிழக அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய செயலாளராக சஞ்சய் தத் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தமிழகம் உள்பட 9 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டியின் புதிய செயலாளர்களை அவர் நியமித்துள்ளார். தமிழக காங்கிரஸ் செயலாளராக சஞ்சய் தத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மகாராஷ்டிரா சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, ஜம்மு காஷ்மீரின் செயலாளராக ஷகீல் அகமதுகான், உத்தராண்ட் செயலாளராக ராஜேஷ் தமனி, பி.பி., சிங், முகமது மொஹைத், சரத் ராவுத் ஆகியோர் மேற்கு வங்கத்தின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு காங்கிரசில் இணைந்த பின்தங்கிய வகுப்பினரின் தலைவர் அல்பேஷ் தாகூர் பீகார் செயலாளராகவும், சல்லா வம்ஷி சந்த் ரெட்டி மற்றும் பி.எம். சந்தீப் ஆகியோர் மகாராஷ்டிராவிற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அனைத்து இந்தியா மகிளா காங்கிரஸ் தலைவராக ரேபரேலி எம்.எல்.ஏ., அதிதி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.