கோரிக்கைகளை நிறைவேற்றினால் பிரிக்கால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்படும் : ஏ.ஐ.சி.சி.டி.யூ.,

கோவை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்தினர் நிறைவேற்றினால் பிரிக்கால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்படும் என அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்திய ஆணையத்தின் தேசிய தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்தினர் நிறைவேற்றினால் பிரிக்கால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்படும் என அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்திய ஆணையத்தின் தேசிய தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிக்கால் நிறுவனம் பெரியநாயக்கன் பாளையம் மற்றும் சின்னமத்தம் பாளையம் ஆகிய இரு இடங்களில் தனது யூனிட்டுகளை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்த இரு யூனிட்டுகளிலும் சுமார் 1,200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கென அதிகாரப்பூர்வ கோவை மாவட்ட பிரிக்கால் ஊழியர் கூட்டமைப்பு சங்கம் நிறுவப்பட்டு, அதன்படி நிர்வாகத்தினரிடம் தங்களது கோரிக்கைகளை முறையிட்டு வருகின்றனர். இந்த சங்கமானது, அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்திய ஆணையத்தில் (AICCTU) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சி.பி.ஐ.(எம்.எல்) கூட்டமைப்பிலும் இணைந்துள்ளது. 



இந்த நிலையில், கோவை மாவட்ட பிரிக்கால் ஊழியர் கூட்டமைப்பு சங்கத்தினர், பிரிக்கால் நிர்வாகத்திடம் கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14-ம் தேதி முதற்கட்டமாக வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்தின் தலைவர்கள் மற்றும் முக்கிய சில உறுப்பினர்கள் மீது மட்டும் பிரிக்கால் நிர்வாகத்தினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, 700 ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் நலன்களை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என்றும் புகார் அளித்தனர்.

பின்னர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை (ஆக.,20) முதல் பிரிக்கால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று போராட்டம் 4-வது நாளாக எட்டியுள்ள நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் பிரிக்கால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்படும் என அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்திய ஆணையத்தின் தேசிய தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- தங்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிய தொழிலாளர்கள் மீது எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகத்தினர் திரும்பப் பெற வேண்டும். மேலும், 143 தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனைகளுமின்றி மீண்டும் பணி வழங்க வேண்டும். அதேவேளையில், பிரிக்கால் நிறுவனத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, வெற்றி பெறும் தொழிற்சங்கத்தினரிடம் நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசு மவுனம் காத்து வருவதால், பல்வேறு சந்தேகங்கள் தோன்றுகின்றன. பிரிக்கால் நிர்வாகத்தினருக்கு ஆதரவாக அரசும், கோவையைச் சேர்ந்த அமைச்சரும் செயல்படுகின்றனரா..? என்ற கேள்வியும் எழுகிறது, எனக் கூறினார். 



"144 ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்பதே தங்களது கோரிக்கையாகும். கடந்த 14-ம் தேதி நடந்த முதற்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தில் கிட்டதட்ட 700 ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆனால், நிர்வாகம் ஒரு சில ஊழியர்கள் மீது மட்டுமே ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழியர்கள் மீதான பாரபட்ச நடவடிக்கை திரும்பப் பெற வேண்டும். கல்வி, விடுமுறைப் படிகள் என பல்வேறு தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் நிர்வாகத்தினர் வழங்க வேண்டும். இதுவரை நிர்வாகம் சார்பில் இருந்து எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. 3-வது நபரின் முன்னிலையில் தொழிற்சங்கத்தினருக்கான ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும்," என்றார் கோவை மாவட்ட பிரிக்கால் ஊழியர் கூட்டமைப்பு சங்கத்தைச் சேர்ந்த நடராஜன். 

ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து பிரிக்கால் தொழிற்சாலைக்கான தலைமை மக்கள் அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறியதாவது:- கடந்த 2015-ம் ஆண்டு அரசு, பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, தொழிலாளர்களுடன் சுமூகமான உறவை கடைபிடிக்க நிர்வாகம் விரும்புகிறது. ஆனால், 133 ஊழியர்களுக்காக ஒப்பந்தத்தில் இருந்து தொழிற்சங்கங்கள் பின்வாங்குகின்றன. இதனால், தொழிற்சாலையின் வர்த்தகம் பாதிக்கிறது. மேலும், சென்டில்மென்ட் காலங்களில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதியாகும். ஆனால், அதனை மீறி 3 முறை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை, ஊழியர்கள் யாரையும் வெளியேற்றப்போவதாக நிர்வாகம் தரப்பில் இருந்து எந்தவித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

மேலும், 144 ஊழியர்கள் நிர்வாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மீண்டும் பணியில் அமர்த்த பிரிக்கால் நிர்வாகம் தயாராக இருக்கிறது. அதேநேரம் விதிமுறைகளை மீறி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், தொழிற்சாலையின் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் குறித்து நேற்றுதான் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், அவர்கள் 14 நாட்கள் நோட்டீஸ் காலகட்டத்தில் உள்ளனர். 25 ஊழியர்கள் நிர்வாகத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு பணிக்கு திரும்பியுள்ளனர். எஞ்சிய ஊழியர்களும் நிர்வாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்கப்படலாம், என்றார். 

இதனிடையே, ஏற்கனவே பெரும்பான்மை பலத்துடன் தொழிற்சங்கம் இருப்பதால், மீண்டும் தேர்தல் நடத்த தேவையில்லை என நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விதிமுறைகளை மீறி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தின் மூலமாக, நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுவிட்டதாக பிரிக்கால் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

ஊழியர்களுக்கு பழைய ஒப்பந்தத்தின்படி ஊதியம், படிகள் என அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்பதில் பிரிக்கால் நிறுவனம் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்த பதவிகள் மற்றும் பணிகளை பிரிக்கால் நிர்வாகத்தினர் திரும்ப ஒப்படைத்தால், போராட்டத்தைக் கைவிட தொழிற்சங்கத்தினர் தயாராக இருக்கின்றனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...