கோவை: கடந்த 30 ஆண்டுகளாக வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை, கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தொடர் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
கோவை: கடந்த 30 ஆண்டுகளாக வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை, கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தொடர் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
வீரசாமி முதலியார் தெருவில் 1854-ம் ஆண்டு முதல் வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்த வண்ணமே இருந்து வருகிறது.
இதற்கு முக்கியக் காரணம், பள்ளியின் சுற்றுப்புறச் சுவரை பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுநீர் கழிக்கும் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டினாலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றுவதோ அல்லது இந்தப் பள்ளியில் குழந்தைகளை தேர்வு சேர்ப்பதற்கு தயக்கம் காட்டி வரும் சம்பவங்கள் நடக்கின்றன.

"கோவை மாநரகாட்சியால் உருவாக்கப்பட்ட கழிப்பறை போன்ற தோற்றமே, பள்ளியின் சுற்றுப்புறச் சுவரை பொதுமக்கள் தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர்," எனக் கூறுகிறார் பள்ளியின் ஆசிரியர்.
பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில்,"பள்ளியின் சுற்றுப்புறச் சுவரை நாள்தோறும் மாநகராட்சி ஊழியர்களின் மூலம் நாள்தோறும் தூய்மை செய்து வருகிறோம். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்சனை இருந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை தொடரும் பட்சத்தில், சுவர்களில் சுவர்களில் எழுதியோ அல்லது கடவுள் உள்ளிட்ட படங்களை ஒட்டி வைக்கவோ முடிவு செய்துள்ளோம்," என்றார்.
பள்ளி வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் மறைவை பயன்படுத்தி, பொதுமக்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர்.
