திருப்பூர்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகநாதன் (வயது 33). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முனீஸ் (32), பிரவீன் குமார் (33) மற்றும் சுப்பிரமணி (40).

இவர்கள் 4 பேரும் ஈரோட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று இரவு (புதன்கிழமை) காரில் திருப்பூர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
காரை சுப்பிரமணி ஓட்டினார். கார் கோபி-குன்னத்தூர் சாலையில் நெட்டிச்சிபாளையம் பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்ற பயணிகள் 3 பேர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் பலியாகினர். மேலும், ஆட்டோ டிரைவர் சின்னச்சாமி (40) மற்றும் பொதுமக்கள் மூவர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.