கோவை: மூன்று மாத ஊதிய நிலுவையால் கோவை மாவட்ட வனத்துறையில் பணிபுரியும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அவதியுற்று வருகின்றனர்.

கோவையில் 130 பேர் வேட்டைத் தடுப்பு காவலர்களாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.
மாவட்ட நிர்வாகத்திற்கு பணம் தற்போது வந்த போதிலும், அவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பது, இரவு ரோந்து போன்ற பணிகளில் ஈடுபடும் இவர்களுக்கு முன்னதாக ரூ.8,000 ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவர்கள் ஊதியம் வழங்குவதில் அரசு தொய்வு காட்டி வருகிறது.
பொதுவாக இந்த பிரச்சனை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழும் என்றும், ஆனால், தற்போது செப்டம்பர் மாதமே இந்த பிரச்சனை தலைதூக்கியுள்ளதாகவும், விரைவில் பிரச்சனை சரி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.