எனது மனக்குமுறலை கூறப்போகிறேன்: சலசலப்பை ஏற்படுத்தும் அழகிரி

மதுரை: சென்னையில் நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக மறைந்த தி.மு.க., தலைவரின் மகன் அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரை: சென்னையில் நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக மறைந்த தி.மு.க., தலைவரின் மகன் அழகிரி தெரிவித்துள்ளார். 

கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு தி.மு.க.வில் மு.க.அழகிரி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது மு.க.அழகிரி, உண்மையான தி.மு.க. தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், தி.மு.க.வில் முக்கிய பதவியை கேட்ட மு.க.அழகிரியின் விருப்பம் மேலிட தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தி.மு.க.வில் உள்ள தனது ஆதரவாளர்கள் துணையோடு சென்னையில் வருகிற 5-ம் தேதி கருணாநிதி நினைவு அமைதி பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தமிழகம் முழுவதும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தொண்டர்களைத் திரட்டும் வகையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மு.க.அழகிரி நடத்தும் பேரணியில் தி.மு.க.வினர் யாரும் பங்கேற்கக்கூடாது என்பதில் தி.மு.க. தலைமையும் உறுதியாக இருப்பதால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகளிடம் மு.க.அழகிரியின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக சென்னையில் தங்கி இருந்த மு.க.அழகிரி நேற்று (புதன்கிழமை) இரவு மதுரை சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தலைவர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் சென்னையில் வருகிற 5-ம் தேதி அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணிக்காக அண்ணா சாலையில் இருந்து அனுமதி கேட்டோம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக போலீசார் திருவல்லிக்கேணியில் இருந்து பேரணி நடத்த கூறி உள்ளனர்.

இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். என்னை தி.மு.க.வில் இணைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தலைவர் கலைஞர் என்னிடம் எப்போது கூறுகிறாரோ? அப்போது எனது மனக்குமுறலை மக்களிடம் கூறுவேன். சென்னையில் நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்." என்றார்.

பேட்டியின் போது மு.க.ஸ்டாலின் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "பேரணி பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போது ஊரணி பற்றி கேள்வி கேட்கக்கூடாது." என்று சாடினார் மு.க.அழகிரி.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...