கோவையில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் திருடிய மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடி சிறையில் இருக்கும் ஆறு பேரில் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடி சிறையில் இருக்கும் ஆறு பேரில் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது:-

சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம், எந்திரத்தில் சில நபர்கள் ஸ்கிம்மர் கருவி மற்றும் காமிராக்கள் பொருத்தி அங்கு வரும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம் கார்டு விவரங்களைத் திருடினர். பின்னர் அந்த நபர்கள் போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்-களில் பணம் எடுத்துள்ளனர்.

இதன்படி கடந்த ஜூன் மதம் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ரூ.12 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளர் சதீஷ்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் கடந்த 7.6.18 அன்று புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். துணை கமிஷனர் பெருமாள் (குற்றப்பிரிவு), மேற்பார்வையில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர், மற்றும் சைபர் கிரைம் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.



இந்த தனிப்படையினர் லவசாந்தன், தமிழரசன், நிரஞ்ஜன், வசீம், மனோகரன், கிஷோர், ஆகிய ஆறு பேரை கடந்த 22.6.18 அன்று கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் லவசாந்தன், நிரஞ்சன், தமிழரசன் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சைபர் கிரைம் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவுக்கு பரிந்துரை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கமிஷனர் பெரியய்யா, அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கோவை மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீசார் நேற்று இரவு வழங்கினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...