கோவை: கேரளாவில் ஏற்பட்ட பேரிடரின் போது தமிழக மக்கள் கேரளாவுக்கு உதவியதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபர் தமிழக மக்களுக்கு நன்றி கூறும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழகத்தில் இருந்து எங்களுக்கு உதவிய மக்களுக்கு நன்றி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனது உங்கள் 'பவரை' காட்டினீர்கள். இப்போ எங்களுக்கு உதவி செய்துள்ளீர்கள். பாலக்காடு மக்களுக்கு தெரியும், ஏனென்றால், இவ்வழியாகத் தான் தமிழகத்தில் இருந்து வந்த அனைத்து நிவாரணப் பொருட்களும் சென்றது. இனி தமிழகத்திற்கு எந்த பிரச்சனை என்றாலும் நாங்கள் வந்து நிற்போம். உங்களுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்." என்று கூறியுள்ளார்.