தவறான அரசியல் கருத்துக்களை பரப்பிய ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்களை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசியல் ரீதியாக தவறான கருத்துக்களை சித்தரித்து பரப்பி குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 5-ம் தேதி அமெரிக்க செனட் சபையில் பேஸ்புக், டிவிட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்நாட்டின் அரசியலில், சமூக வலைதளங்கள் மூலமான சர்வதேச நாடுகளின் தலையீடு குறித்த புகார் தொடர்பாக விளக்கமளிக்க உள்ளது.
அதற்கு முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பிவரும் பேஸ்புக், டிவிட்டர் ,இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஈரான் மற்றும் ரஷ்யாவிலிருந்து செயல்பட்டதை அந்நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. அந்த வகையில் இதுவரை 652 பக்கங்களை பேஸ்புக் முடக்கியுள்ளது.
இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பார்க் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் பாதுகாப்பு திட்டம் எப்போதும் பாரம்பரிய ஹேக்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தடுக்கும் வண்ணம் உள்ளது. ஆனால், கடந்த 2016-ல், இந்த வகையான அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பதற்கு மட்டுமல்லாமல், பிழையான உள்ளடக்கங்களின் நெட்வொர்க்குடனான ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்கொண்டோம். பின்னர், பாதுகாப்பு, மற்றும் தனியுரிமையை மேம்படுத்துவதற்கு நாங்கள் பெரிதும் முதலீடு செய்துள்ளோம்.
நாங்கள் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். இன்னமும் எங்களுக்குத் தெரியாது என்று நிறைய இருக்கிறது. ஒரு நிறுவனமாக நாங்கள் அனைத்து புலனாய்வு கருவிகளையும் பயன்படுத்த முடியாது. அது அரசு மற்றும் உளவுத்துறை கைவசமே உள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.