கோவை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதோடு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ நிதி திரட்டி வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகையை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையிலும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது.
கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமியா பள்ளியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள் மீண்டு வர வேண்டுமென தொழுகை நடத்தப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில் நிதி திரட்டப்பட்டது. இல்லாதவர்களுக்கு உதவிடுவதை நோக்கமாகக் கொண்ட தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையில் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில் உதவிகளை செய்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர தொழுகை நடத்தியதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து இனிப்புகளை வழங்கியும், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். உணவுகளை மூன்று பகுதியாக பிரித்து ஒன்றை குடும்பத்திற்கும், மற்றதை உறவினருக்கும், ஏழைகளுக்கும் வழங்கி பண்டிகையை கொண்டாடினர்.