கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாட்டா ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளிக்கிறது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கோவை: ஒப்பணக்கார வீதியில் உள்ள பாட்டா ஷோரூமில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ரூ.49 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகி சேதமடைந்தன.

கோவை ஒப்பணக்கார வீதியில் இருக்கும் பேட்டா ஷோரூமில் பணியாளர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு வழக்கம் போல் கடையை மூடிச் சென்றனர். இந்த நிலையில், இரவு 9 மணியளவில் அந்தக் கடையிலிருந்து கரும்புகை வெளியேறியது.

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் மற்றும் மூன்று வாகனங்களில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கடையின் ஷட்டரை உடைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் சுமார் ரூ.49 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், மின் கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. நகரின் முக்கிய பகுதியான ஒப்பணக்கார வீதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.