8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை

சேலம் - சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சேலம் - சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக 274 கி.மீ., நீளத்துக்கு 8 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த சாலைக்காக 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த சாலை அமைக்கப்பட உள்ள இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பணிகள் ஏறக்குறைய நிறைவடைய உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க., எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் - சென்னை பசுமைவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தனர். 



தற்போதைய திட்டப்படி, சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருகின்றன. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின்படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அரசு நடத்தவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...