கோவை: ஒரு வார காலமாக பேருந்து போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் இன்று முதல் கோவையில் இருந்து வால்பாறைக்கு ஐந்து பேருந்துகள் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது.
இதன் காரணமாக வால்பாறையில் வெள்ளம் சூழ்ந்து பேருந்துகள் எங்கும் செல்லமுடியாத வண்ணம் மண் சரிவுகளும், சாலை விரிசல்களும் ஏற்பட்டன. இதனால் ஒரு வார காலமாக கோவையில் இருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனிடையே, மழையின் தீவிரம் குறைந்து வெள்ள நீர் வடியத் தொடங்கியதை அடுத்து கோவையில் இருந்து வால்பாறைக்கு இன்று முதல் சோதனை அடிப்படையில் (கோவை) அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை-வால்பாறைக்கு முதல்கட்டமாக இன்று முதல் ஐந்து பேருந்துகள் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன. மலைப்பாதையில் மண் சரிவுகள் சாலைகளில் விரிசல் சரிசெய்யப்பட்டு வருகின்றன. நாளை நிலவரம் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்." என்றார்.