"கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க நடவடிக்கை"

கோவை: கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 100 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்தார்.

கோவை: கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 100 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்புக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் எட்வின் ஜோ கோவை அரசு மருத்துவமனையை மேற்பார்வையிட்டார். அவருடன் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர் அசோகன், இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்திரவேல் உள்ளிட்ட பல மருத்துவர்கள் சென்றனர். 

மேற்பார்வைக்குப் பின்னர் நம்மிடம் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் எட்வின் ஜோ கூறியதாவது :- தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், சீட்டை அதிகரிக்கப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற முயற்சியில் தற்போது கரூர் மருத்துவக் கல்லூரியை முன்னிலைப்படுத்தி செயல்படுத்தி வருகிறோம். மேலும், மதுரை மற்றும் திருநெல்வேலி மருத்துவ கல்லூரிகளில் 100 இடங்கள் கூட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல, கோவை மற்றும் கன்னியாகுமரியில் மேலும் 100 இடங்களைக் கூட்டுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் 2025-க்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், தமிழகத்தில் வேகமாக செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கான கருத்தரங்குகள் மற்றும் ஆய்வு விவரங்களை துவங்கியுள்ளோம், இவ்வாறு கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...