கோவை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய வாட்ஸ்-அப் எண்ணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் பாண்டியராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது :- பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க குற்றங்களைக் கட்டுப்படுத்த 7708100100 என்ற மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள், தகவல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து போலீஸாருடன் தகவல் தொடர்பில் இருக்கலாம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. அதேபோல, இவை அனைத்தும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு
அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, மேற்பார்வை செய்யப்படும்.
கோவை மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த ஆண்டு ரூ. 67 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த நிதிக்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். மருதமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் ஆறு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 244 சாலை விபத்துக்களில் 333 பேர் விபத்தில் இறந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாதம் மட்டும் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, இந்த மாதம் வரை மொத்தம் 691 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.