யானைகள் வழித்தடம் மீட்பு என்ற பெயரில் பழங்குடியினரை வெளியேற்றும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி மனு

நீலகிரி : வாழைத்தோட்டம் மற்றும் பொக்காபுரம் பகுதியில் யானைகள் வழித்தடம் என்ற பெயரில் பழங்குடியினர், வனம் சார்ந்து வாழ்பவர்கள் மற்றும் சிறு விவசாயிகளை வெளியேற்ற முயற்சிப்பதைக் கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி : வாழைத்தோட்டம் மற்றும் பொக்காபுரம் பகுதியில் யானைகள் வழித்தடம் என்ற பெயரில் பழங்குடியினர், வனம் சார்ந்து வாழ்பவர்கள் மற்றும் சிறு விவசாயிகளை வெளியேற்ற முயற்சிப்பதைக் கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக வாழைத்தோட்டம், பொக்காபுரம் பழங்குடியினர், வனம் சார்ந்து வாழ்வோர் மற்றும் சிறு குறு விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- நீலகிரி மாவட்டம் சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் விஞ்ஞான ரீதியான ஆய்வின் அடிப்படையில் நான்கு யானை வழித்தடங்கள் உள்ளதாகவும், மாநில அளவிலான அதிகாரிகள் இரு நாட்கள் இங்கு மேற்கொண்ட ஆய்வில் ஒரு ஒருங்கிணைந்த யானை வழித்தடமும் உள்ளதாக இறுதி செய்துள்ளனர். இதில், மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்து விஞ்ஞான ரீதியான ஆய்வின் அடிப்படையில் கஜா என்ற ஆய்வறிக்கை மூலமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் யானை வழித்தடத்தில் எந்த குடியிருப்புகளும் இல்லை. 

ஆனால், சில வன அதிகாரிகள், இங்கு வாழும் மக்களை திட்டமிட்டு வெளியேற்ற வேண்டும் என எண்ணத்தில் பழங்குடியினர் மற்றும் வனம் சார்ந்து வாழ்வோர் வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006-ன் அடிப்படை உரிமைகள் பெற்று வாழும் மக்களையும் வெளியேற்ற தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகள் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்தே முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை எதிர்த்து பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 



யானை வழித்தடம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி, இது தொடர்பான செயல் திட்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், யானை வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள் குறித்தும், கஜா என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள யானை வழித்தடம் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட யானை வழித்தடத்திலும் உள்ள கட்டிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், மாவட்ட நிர்வாகம் கஜா அறிக்கையில் குறிப்பிட்டுள்ள யானை வழித்தடம் குறித்த கட்டிடங்களின் விவரத்தை சமர்ப்பிக்கவில்லை. விரிவாக்க யானை வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களின் விவரத்தை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிலத்தில் எவ்வித ஆவணங்களும் இன்றி வீடுகள் கட்டியுள்ளது போல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மக்களிடம் வாங்கிய பல ஆவணங்களைப் பதிவு செய்யாமல் பழங்குடி மக்கள் அங்கீகார சட்டம் 2006-ன்படி பெற்றுக் கொண்ட தனிநபர் உரிமைகளை பட்டா குறித்து குறிப்பிடவில்லை.

மேலும், வனம் சார்ந்து வாழ்வோர் பழங்குடியினர் என்று குறிப்பிடாமலும், அரசு அவர்களுக்கு அளித்த அனுமதி குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகள் (குடிசைகளுக்கு) அனுமதி தேவையில்லை என்றும் குறிப்பிடவில்லை. ஆனால், அரச நிலத்தை ஆக்கிரமித்து முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1991-ம் முன்பாக ஊராட்சி கூட்டம் வருவற்கு முன்பாக கட்டப்பட்ட குடியிருப்புப் பற்றி வரைபடமோ, ஊராட்சி அனுமதியோ, தேவையென்று நிர்பந்தம் இல்லாததால், பல குடியிருப்புகள் கட்டி, வீட்டு வரி செலுத்தி வந்தனர். 

இது குறித்து முழு விவரம் தாக்கல் செய்யப்படாத காரணத்தால் 390 வீடுகள் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையின்படி, வனம் சார்ந்து வாழ்வோர், பழங்குடியினர் மற்றும் சிறு விவசாயிகள் தங்களுக்கு குடியிருப்புக்களை இழக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவரமான திருத்தப்பட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் துறை செயலாளரோ தாக்கல் செய்து பொதுமக்கள் தங்கள் குடியிருப்பை இழக்காமல் பாதுகாத்து உதவ வேண்டும். இவர்களை காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...