கோவை: சரவணம்பட்டி அருகே உள்ள ப்ரோசோன் வணிக வளாகத்தில் ஐநாக்ஸ் திரையரங்கம் இன்று முதல் திறக்கப்பட்டது.

கோவை - சத்தியமங்கலம் சாலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை மாதம் ப்ரோசோன் என்ற வணிக வளாகம் திறக்கப்பட்டது. பல்வேறு வகையான அங்காடிகள் இருந்த போதும், திரையரங்குகள் விரைவில் கொண்டு வரப்படும் என வணிக வளாகத்தின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களின் வருகை பிற வணிக வளாகங்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவானதாகவே காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஐநாக்ஸ் (INOX) திரையரங்கம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதற்கு பின்னர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்கில் மொத்தம் 9 திரைகள் உள்ளன. இவற்றில், 170 முதல் 360 வரையிலான இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.