வீட்டுமனை பட்டா கோரி உடலில் தேசியக் கொடியை வரைந்து நூதனப் போராட்டம் நடத்திய இளைஞர் கைது

கோவை: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி உடலில் தேசியக் கொடியினை வரைந்து போராட்டம் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி உடலில் தேசியக் கொடியினை வரைந்து போராட்டம் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் குடியிருக்கும் 3 சென்ட் நிலத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், குடும்பத்துடன் கைது செய்து பின்னர் விடுவித்தனர். 



இந்நிலையில், இன்று மீண்டும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, தேசியக் கொடியினை தனது உடலில் வரைந்தும், தேசியக் கொடியை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். தனது இடத்திற்கு வீட்டுமனை பட்டா கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட சரவணக்குமாரை பந்தயசாலை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...