கோவை : மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கோவை மாவட்ட அரசு மருத்துவனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கோவை மாவட்ட அரசு மருத்துவனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே தமிழக அரசிடம், அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், மருத்துவர்கள் இன்று நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவி சங்கர் கூறியதாவது :- மத்திய அரசு மருத்துவர்கள் குறுகிய காலத்தில் பணி உயர்வு பெறுகின்றனர். ஆனால், தமிழக அரசு 7 ஆண்டுகள் கழித்த பின்புதான் மருத்துவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கின்றனர். ஆகவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் எங்களது போராட்டத்தை துவக்கியுள்ளோம். வரும் 24-ம் தேதி அனைத்து மருத்துவர்களும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம். மத்திய அரசு மருத்துவருக்கு இணையான ஊதியம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும், என்றார்.