கோவை:கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேல்சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டைச் சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயர் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (65). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், காய்ச்சல் குறையாததால், அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடைய ரத்த மாதிரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.