கேரள வெள்ள நிவாரணமாக ஒருமாத சம்பளத்தை வழங்கிய அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்

கேரள வெள்ள நிவாரணத்துக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கேரள வெள்ள நிவாரணத்துக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததால், கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, குட்டித் தீவு போல காட்சியளிக்கிறது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை மற்றும் வெள்ள பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர். இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அ.தி.மு.க., கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு அ.தி.மு.க, கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிதியாக தருவார்கள். மேலும், கேரளாவுக்கு உணவு, உடை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன," என்றார். 

ஏற்கனவே, தமிழக அரசின் சார்பில் கேரளாவிற்கு இரண்டு கட்டங்களாக ரூ. 10 கோடி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...