தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் :- செல்போனால் மாணவ, மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்க இந்த முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருக்கிறது. தற்போது, கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தில் கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சாருமதி இதற்கான உத்தரவை அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு பிறப்பித்துள்ளார். அவர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை செயலாளர் (பொறுப்பு), பள்ளி கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை பொறுப்பாளர் ஆகியோர் தலைமையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
2005-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு இருந்ததால் மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடு நாளடைவில் தளர்த்தப்பட்டது. தற்போது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.